விழுப்புரத்தில் பாதாள சாக்கடை சுத்திகரிப்பு நிலையத்திற்கு எதிர்ப்பு
ஆட்சியர் அலுவலகம் முற்றுகை
விழுப்புரம் பவர்ஹவுஸ் சாலை மருதூரில் உள்ள சுடுகாடு பகுதியில் நகராட்சி சார்பில் பாதாள சாக்கடை சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்காக நேற்று முன்தினம் அங்குள்ள கல்லறைகள், மரங்களை அகற்றும் பணி நடந்தது. இதையறிந்ததும் அப்பகுதி மக்கள், விவசாயிகள் அங்கு திரண்டு சென்று பொக்லைன் எந்திரத்தை சிறை பிடித்து பணிகளை தடுத்து நிறுத்தினர்.
இதன் காரணமாக அப்பணிகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இந்நிலையில் அதே பகுதியில் பாதாள சாக்கடை சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கான ஆயத்த பணிகளை நகராட்சி நிர்வாகம் மேற்கொண்டுள்ளதாக தெரிகிறது.
இதனால் ஆத்திரமடைந்த வி.மருதூர், கிழக்கு புதுச்சேரி சாலை பகுதியை சேர்ந்த பொதுமக்கள், விழுப்புரம் நகர அ.தி.மு.க. செயலாளர் பசுபதி, மாநில எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் அற்புதவேல் ஆகியோர் தலைமையில் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். இதையடுத்து அவர்கள் அனைவரும் பாதாள சாக்கடை சுத்திகரிப்பு நிலையத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
உடனே அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் விரைந்து வந்து அவர்களை சமாதானம் செய்து மாவட்ட கலெக்டர் அலுவல கத்தில் மனு கொடுப்பதற்காக உள்ளே அனுப்பி வைத்தனர்.
அதன்பேரில் அவர்கள், அங்குள்ள அதிகாரிகளிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். அம்மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:- விழுப்புரம் பவர்ஹவுஸ் வீதி முடிவில் மயானம் உள்ளது. வி.மருதூர், கிழக்கு புதுச்சேரி சாலை பகுதி என சுமார் 10 வார்டு பொதுமக்களின் பயன்பாட்டில் அந்த மயானம் இருந்து வருகிறது. அப்பகுதியில் சுமார் 200 ஏக்கர் விளைநிலங் களில் விவசாயமும் நடந்து வருகிறது. இந்த சூழ லில் அந்த இடத்தில் பாதாள சாக்கடை சுத்திக ரிப்பு நிலையம் மற்றும் பம்பிங் ஸ்டேசன் அமைக்க நகராட்சி ஊழியர்கள், பொக்லைன் எந் திரம் மூலம் செடி, கொடிகளையும், கல்லறைக ளையும் அகற்றினர். ஏற்கனவே சுடுகாட்டு பகுதி இடநெருக்கடியாக உள்ளது. இந்த சுடுகாடு பகு தியில் விடப்படும் கழிவுநீரால் நிலத்தடி நீர் மாசு பட்டு விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது.இப்படிப்பட்ட சூழலில் சுடுகாட்டு இடத்தில் பாதாள சாக்கடை சுத்திகரிப்பு நிலையம் மற்றும் பம்பிங் ஸ்டேசன் அமைத்தால் சுடுகாட்டுக்கு இடம் இல்லாத நிலை ஏற்படும். நிலத்தடி நீர் மேலும் பாதிக்கப்பட்டு விவசாய தொழிலும் பெரும் பாதிப்புக்குள்ளாகும். எனவே பொதுமக் கள் நலன் கருதி,
பாதாள சாக்கடை சுத்திகரிப்பு நிலையம் மற்றும் பம்பிங் ஸ்டேசனை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும். இவ்வாறு அம்மனு வில் கூறியிருந்தனர். மனுவைப்பெற்ற அதிகாரி கள், இதுகுறித்து மாவட்ட கலெக்டரின் கவனத் திற்கு கொண்டு செல்வதாக கூறினர். அதன் பிறகு அவர்கள் அனைவரும் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.