முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் பேட்டி
ஓபிஎஸ்
நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக இடைக்கால பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்கின்றனர், பிரதமர் மோடி மீண்டும் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக பிரதமர் பொறுப்பேற்று நாட்டிற்கு சுபிட்சம் வரக்கூடிய முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்வார். வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் உறுதியாக இரட்டை இலை சின்னம் எங்களுக்கு கிடைக்கும்,ஈரோடு இடைத்தேர்தலில் தற்காலிகமாக இரட்டை இலை சின்னம் அவர்களுக்கு வழங்கப்பட்டது.
நாங்கள் பாஜக கூட்டணியில் தான் இருக்கிறோம், நாங்கள் அதிலிருந்து வெளியே வரவில்லை,கூட்டணி தொகுதி பங்கீடு குறித்து விரைவில் அறிக்கபடும், சசிகாலா வுடன் சந்திப்பது குறித்து அவர்தான் முடிவு செய்ய வேண்டும், அதிமுக ஆட்சியில் தான் மகளுக்கான நலத்திட்ட உதவிகள் செய்யப்பட்டது.
ஆனால் தற்போதைய திமுக ஆட்சியில் எந்த விதமான மக்கள் நலத்திட்டங்களும் செயல்படுத்தப்படவில்லை, நான் எப்போதும் பொறுமையாகவே இருப்பவன், இனியும் பொறுமையாகவே இருப்பேன், அது என் சுபாவம் துரோகத்தின் ஒட்டுமொத்த வெளிப்பாடு எடப்பாடி பழனிச்சாமி அவர் தன்னை முதலமைச்சர் ஆக்கிய சசிகலாவிற்கு செய்தது பெரிய துரோகம் முதல்வரின் வெளிநாட்டு பயணம் அவர் எவ்வளவு முதலீட்டை கொண்டு வருகிறார் என்பதை பொறுத்துதான் அதன் பயன் இருக்கும் என தெரிவித்தார்.