நாமக்கல் மாநகராட்சிக்கான ஆணை - முதல்வா் மு.க.ஸ்டாலின் மேயா், துணை மேயரிடம் வழங்கினார்

நாமக்கல் மாநகராட்சிக்கான ஆணை - முதல்வா் மு.க.ஸ்டாலின் மேயா், துணை மேயரிடம் வழங்கினார்

முன்னாள் முதல்வர், முத்தமிழறிஞர் கலைஞர் தலைமையிலான திமுக ஆட்சியில் கடந்த 01-01-1997 ஆம் ஆண்டு சேலம் மாவட்டத்தில் இருந்து நாமக்கல் மாவட்டத்தை துவக்கி வைத்தார். அதேபோல தமிழ்நாடு சட்டப்பேரவையில் தமிழ்நாட்டில் புதுக்கோட்டை திருவண்ணாமலை நாமக்கல் காரைக்குடி ஆகிய 4 நகராட்சிகளை மாநகராட்சிகளாக தரம் உயர்த்தி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸடாலின் அறிவித்தார்.

அதன்படி நாமக்கல் நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்ந்துள்ளது.. ஒவ்வொரு முறையும் திமுக தலைமையிலான அரசு ஆட்சி செய்யும் போதும் மக்களின் நலனில் அக்கறை கொண்டு மக்களுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து அதனை செயல்படுத்தி வருகிறது. தற்போது தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸடாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு நாமக்கல் நகராட்சியை மாநகராட்சியாக அறிவித்து அதற்கான மேயா் மற்றும் துணை மேயரையும் அறிவித்துள்ளது.

திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை வளாகத்தில் தமிழ்நாட்டில் புதுக்கோட்டை திருவண்ணாமலை நாமக்கல் காரைக்குடி ஆகிய நகராட்சிகளை மாநகராட்சிகளாக தரம் உயர்த்தியதற்கான ஆணைகளை அந்தந்த மாநகராட்சி மேயர் மற்றும் துணை மேயர்களிடம் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் வழங்கினார் இதில் நாமக்கல் மாநகராட்சிக்கான அரசாணையை நாமக்கல் மாநகராட்சியின் முதல் மேயராக பொறுபேற்க இருக்கும் து.கலாநிதி மற்றும் துணை மேயராக பொறுபேற்க இருக்கும் செ.பூபதி ஆகியோர் முதல்வரிடம் பெற்றுக் கொண்டனா். இந்நிகழ்ச்சியில் அமைச்சா்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, பெரியகருப்பன் மற்றும் அரசு துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

Tags

Next Story