செங்கல்பட்டு மாவட்ட அதிகாரிகளுக்கு உத்தரவு

செங்கல்பட்டு மாவட்ட அதிகாரிகளுக்கு உத்தரவு

ஆலோசனை கூட்டம்

கோடைகாலத்தில் பொதுமக்களுக்கு குடிநீர் மற்றும் மின்சாரம் சீராக வழங்குவது தொடர்பாக, அனைத்து துறை அதிகாரிகள் ஆய்வு கூட்டம் செங்கல்பட்டில் நடைப்பெற்றது.

செங்கல்பட்டு மாவட்டத்தில், கோடைகாலத்தில் பொதுமக்களுக்கு குடிநீர் மற்றும் மின்சாரம் சீராக வழங்குவது தொடர்பாக, அனைத்து துறை அதிகாரிகள் ஆய்வு கூட்டம், கலெக்டர் அருண்ராஜ் தலைமையில், நேற்று நடந்தது. இதில், கூடுதல் கலெக்டர் அனாமிகா, தாம்பரம் மாநகர கமிஷனர் அழகுமீனா உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் கலெக்டர் கூறியதாவது,

தாம்பரம் மாநகராட்சிக்கு, செம்பரம்பாக்கம், பாலாற்று பகுதிகளில் இருந்து, நீர்வளத்துறையின் வாயிலாக குடிநீர் மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் வாயிலாக, நெம்மேலி கடல் நீரை குடிநீராக்கும் திட்டங்களின் கீழ், 150 எம்.எல்.டி., தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. செங்கல்பட்டு அடுத்த பழவேலி, மாமண்டூர் பாலாற்றில் இருந்து, செங்கல்பட்டு நகராட்சி பகுதிக்கு தண்ணீர் வழங்கப்படுகிறது. மேலும் கூடுதலாக குடிநீர் வழங்க, 7.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகள் முடிந்த பின், பொதுமக்கள் தேவைக்கு தண்ணீர் வழங்கப்படும்.ரூபாய் மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இப்பணிகள் முடிந்த பின், பொதுமக்கள் தேவைக்கு தண்ணீர் வழங்கப்படும். நந்திவரம் -- கூடுவாஞ்சேரி, மறைமலை நகராட்சி பகுதிகளுக்கு, கூட்டு குடிநீர் திட்டத்தின் வாயிலாக, பாலாற்றில் இருந்து குழாய் வாயிலாக தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. திருக்கழுக்குன்றம், சித்தாமூர் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில், தண்ணீர் தேவை ஏற்பட்டால், ஆழ்துளை கிணறு அமைக்கப்படும்.

மாவட்டத்தில், மின் தடை குறித்து புகார் வரும்பட்சத்தில், மின் தடையை உடனடியாக சரி செய்ய நடவடிக்கை எடுக்கவும், குறைந்த மின் அழுத்தம் இருக்கும் பகுதியில், மின்சாரம் சீராக வழங்கவும் வேண்டும். தண்ணீர் மற்றும் மின்சாரம் குறித்து புகார் வந்தால், உடனுக்குடன் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

Tags

Next Story