30 நாளில் குப்பையில்லா நகராட்சியாக மாற்ற உத்தரவு

30 நாளில் குப்பையில்லா நகராட்சியாக மாற்ற   உத்தரவு

சீர்காழியை 30 நாளில் குப்பை இல்லாத நகராட்சியாக மாற்ற ஆணையருக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். 

சீர்காழியை 30 நாளில் குப்பை இல்லாத நகராட்சியாக மாற்ற ஆணையருக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், நகராட்சிக்கு சொந்தமான பிச்சைக்காரன் விடுதி தெருவில், குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. இதனால் விவசாயம் பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டியிருந்தனர். இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார் .

அப்பொழுது சீர்காழி நகராட்சியில் 30 நாளில் குப்பை இல்லாத நகராட்சையை மாற்ற ஆணையருக்கு உத்தரவிட்டார். அரியப்பிள்ளைகுளம், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 1 கோடியே 11 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ,நடைபாதை மற்றும் மின்விளக்கு உள்ளிட்ட வசதிகளுடன் மேம்படுத்தப்பட்டு வருவதையும், பிடாரிகோவில் தெருவில் உள்ள ஐய்யனார்குளம் , கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ், ரூ.90 இலட்சத்து 97 ஆயிரம் மதிப்பீட்டில் நடைபாதை மற்றும் மின்விளக்கு உள்ளிட்ட வசதிகளுடன், மேம்படுத்தப்பட்டு வருவதையும் மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார். பணிகளை தரமானதாக மேற்கொள்ள வேண்டுமென நகராட்சி அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

Tags

Next Story