சாத்தூர் அருகே விபத்தில் காயமடைந்த பெண்ணுக்கு இழப்பீடு வழங்க உத்தரவு
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே கார் மோதிய விபத்தில் காயமடைந்த பெண்ணுக்கு ரூ. 41 லட்சம் இழப்பீடு வழங்க ஸ்ரீவில்லிபுத்தூர் தலைமை குற்றவியல் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் தாலுகா ஏழாயிரம் பண்ணையைச் சேர்ந்தவர் நாகராஜ் மனைவி பாண்டீஸ்வரி, 27, பட்டாசு ஆலையில் பணிபுரிந்து வரும் இவர் கடந்த 2022 ஜூன் 26 காலை 8:55 மணிக்கு தனது கணவர் நாகராஜ், இரண்டு குழந்தைகளுடன் டூவீலரில் சாத்தூர் ஓ மேட்டுப்பட்டி ரோட்டில் செல்லும்போது பின்னால் வந்த கார் மோதியதில் பலத்த காயமடைந்தார்.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட பாண்டீஸ்வரி தனக்கு ரூ.75 லட்சம் இழப்பீடு கோரி ஸ்ரீவில்லிபுத்தூர் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பிரித்தா இதில் பாண்டீஸ்வரிக்கு ரூ. 41 லட்சத்து 77 ஆயிரத்து 406ஐ, கோவில்பட்டி நேஷனல் இன்சூரன்ஸ் கம்பெனி இழப்பீடாக வழங்க நீதிபதி பிரித்தா உத்தரவிட்டார்.
Tags
Next Story