ஈரோடு மாவட்டத்தில் மகளிர் விடுதிகளை பதிவு செய்ய உத்தரவு

மாவட்ட ஆட்சியர்
ஈரோடு மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து அரசு நிறுவனங்கள் நடத்தும் மகளிர் விடுதிகள், கல்லூரி மாணவிகள் மகளிர் விடுதிகள், அரசு சாரா நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மகளிர் விடுதிகள், மருத்துவமனைகளில் உள்ள மகளிர் விடுதிகள், ஜவுளிக்கடைகளில் உள்ள விடுதிகள், அறக்கட்டளைகள். சங்கங்கள், மதம் சார்ந்த நிறுவனங்கள், நகை கடைகள் விடுதிகள், பயிற்சி நிறுவனங்கள்,
ஷாப்பிங்மால் தனி நபரால் நடத்தப்படும் பணிபுரியும் மகளிர் விடுதிகள் மற்றும் தற்காலிகமாக நடத்தப்படும் விடுதிகள் அனைத்தும் உடனடியாக கண்டிப்பாக பதிவு செய்ய வேண்டும். பதிவு உரிமம் பெறுவதற்கு தழிழ்நாடு அரசின் இணையதளம் வழியாக உடனடியாக சான்றிதழ்களை முறையாக பதிவேற்றம் செய்து விண்ணப்பம் அதன் இரு நகல்களில் இணைத்து உரிய ஆவணங்களுடன் மாவட்ட ஆட்சியரகம், 6 வது தளத்தில் உள்ள மாவட்ட சமூக நல அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
குறிப்பிட்ட காலத்திற்குள் பதிவு செய்ய தவறினால் விடுதியின் உரிமையாளர் மற்றும் மேலாளர் ஆகியோர்க்கு கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்படுகிறது. இணையதளத்தில் விண்ணப்பிப்பது குறித்து ஏதேனும் சந்தேகமிருப்பின் ஈரோடு மாவட்ட ஆட்சியரக 6 வது தளத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட சமூகநல அலுவலகத்திற்கு உரிய ஆவணங்களுடன் நேரிலோ அல்லது 0424-2261405 என்ற தொலைபேசி வாயிலாகவோ அணுகுமாறு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.
