செய்யாறில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாமல் பணிகளை முடிக்க உத்தரவு

செய்யாறில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாமல் பணிகளை முடிக்க உத்தரவு

பணிகளை ஆய்வு செய்த எம்எல்ஏ

செய்யாறில் நகர்ப்புற சாலை மேம்பாட்டு திட்டத்தின் மூலம் ரூ.4 கோடி 80 லட்சம் மதிப்பீட்டில் மூன்று தொகுப்புகளாக 27 வார்டுகளில் சாலை அமைக்கும் பணி எம்எல்ஏ ஆய்வு செய்தார்.

செய்யாறு திருவத்திபுரம் நகராட்சியில் 3 வார்டு எல்லப்பன் தெருவில் தமிழ்நாடு அரசு நகர்ப்புற வளர்ச்சி துறை சார்பில் நகர்ப்புற சாலை மேம்பாட்டு திட்டத்தின் மூலம் ரூபாய் 4 கோடி 80 லட்சம் மதிப்பீட்டில் மூன்று தொகுப்புகளாக 27 வார்டுகளில் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இன்று எல்லப்பன் தெருவில் நடைபெற்ற பணியினை செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் ஒ.ஜோதி நேரில் சென்று திடீர் ஆய்வு செய்து சாலை அமைக்கும் பணியின் தரத்தை குறித்தும் பணியினை துரிதப்படுத்தி பொதுமக்களுக்கும் சிரமம் இல்லாமல் பணியினை விரைந்து முடிக்க ஆலோசனை வழங்கினார்.

உடன் நகர மன்ற தலைவர் A.மோகனவேல், நகர கழக செயலாளர் K.விஸ்வநாதன் செய்யாறு கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் A.ஞானவேல் நகர மன்ற உறுப்பினர் ஆசிரியர் ரமேஷ் மாவட்ட விவசாய வர்த்தககுழு உறுப்பினர் கோபு, மாவட்ட தொழிலாளர் அணி துணைத் தலைவர் கருணாநிதி நகர துணை செயலாளர் சதீஷ் மற்றும் அரசு அதிகாரிகள் திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்

Tags

Next Story