ஜூன் 4ஆம் தேதி மதுக்கடைகள், பார்களை மூட உத்தரவு!
டாஸ்மாக் (பைல் படம் )
பாராளுமன்ற தேர்தல்- 2024 வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு டாஸ்மாக் மதுபானக் கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுபானக் கூடங்கள் மற்றும்; அனைத்து FL2, FL3, FL4A உரிமதலங்கள் ஆகியவை 04.06.2024 (வாக்கு எண்ணிக்கை நாள்) அன்று முழுவதும் மூடப்பட்டிருக்க வேண்டும். மேற்படி தினத்தில் மதுபான விற்பனை தடை செய்யப்பட்டுள்ளதால் மதுபான விற்பனை ஏதும் நடைபெறக் கூடாது.
மேற்குறிப்பிட்ட நாளில் மதுபான விற்பனை, மதுபானத்தை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கடத்துதல், மதுபானத்தை பதுக்கி வைத்தல் போன்ற செயல்கள் கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட நபர்கள் மீது தமிழ்நாடு மதுவிலக்கு அமலாக்க சட்டத்தின் கீழ் குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி தெரிவித்துள்ளார்.