உடல் உறுப்பு தானம் விழிப்புணர்வு பேரணி!
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உடல் உறுப்பு தான விழிப்புணர்வு பேரணி நடந்தது.
நீலகிரி மாவட்டத்தில் விருப்ப முழு உடல் தான விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் அருணா துவக்கி வைத்தார். ஊட்டி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை சார்பில், உலக விருப்ப முழு உடல் உறுப்பு தானம் தினத்தையொட்டி மருத்துவர்கள், செவிலியர்கள் கலந்து கொண்ட பேரணி சேரிங்கிராஸ் பகுதியில் தொடங்கி புளு மவுண்டன் பகுதியில் உள்ள சேட் மருத்துமனை வரை நடந்தது. இதில், 'உடல் உறுப்பு தானமே, உலகத்தில் சிறந்த தானம்; இருக்கும் வரை ரத்த தானம், இருந்த பின் உறுப்பு தானம்; உயிர் தமிழுக்கு, உறுப்புகள் சக உயிர்களுக்கு' இறந்த உடலை புதைக்க வேண்டாம் எரிக்க வேண்டாம் உடல் தானம் செய்யலாம் உள்ளிட்ட பல வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை, 150க்கும் மேற்பட்ட மருத்துவர்கள், செவிலியர்கள் கையில் ஏந்தி பேரணியாக சென்றனர்.
Next Story