சேலத்தில் நம்ம ஊரு திருவிழா

சேலத்தில் நம்ம ஊரு திருவிழா
X

கரகாட்டம் 

கலை பண்பாட்டு மையம் சார்பில் சேலத்தில் நம்ம ஊரு திருவிழா இன்றும் நாளையும் நடக்கிறது.

தமிழகத்தில் நாட்டுப்புறக்கலைகளை வளர்க்கவும், தமிழ் மக்களின் பண்பாடுகளை கொண்டாடுவதற்கும் சங்கமம்- நம்ம ஊரு திருவிழா என்ற தலைப்பில் கலைத்திருவிழா சேலம் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள மாநகராட்சி திடலில் இன்று (திங்கட்கிழமை) மாலை தொடங்குகிறது.

இதில் சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்கிளில் இருந்து 400 கலைஞர்கள் கலந்து கொள்கின்றனர். இதில் மங்கள இசை, தப்பாட்டம், கோலாட்டம், ஒயிலாட்டம், நையாண்டி மேளம், கரகாட்டம், காவடியாட்டம், புரவியாட்டம், சாட்டை குச்சியாட்டம், சிலம்பாட்டம், ஆதிமேளம், பம்பை, மல்லர்கம்பம், புலியாட்டம், சாட்டைகுச்சியாட்டம் உள்ளிட்ட பல்வேறு கிராமப்புற கலைஞா்கள் நடக்கிறது. தொடர்ந்து இந்த கலைத்திருவிழா நாளையும் (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது.

தினமும் மாலை 6 மணி முதல் இரவு 9.30 மணி வரை நடக்கிறது. இதில் சாதனை படைக்கும் 30 கலைஞர்களுக்கு விருது வழங்கப்படுகிறது. இந்த தகவலை கலை பண்பாட்டு மைய சேலம் மண்டல உதவி இயக்குனர் நீலமேகன் தெரிவித்து உள்ளார்.

Tags

Next Story