பைக்காரா படகு இல்லத்தில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்
சுற்றுலா மாவட்டமான நீலகிரி மாவட்டத்தில் தற்போது இதமான காலநிலை நிலவி வருகிறது. இதனால் தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்தும் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் அதிகவில் சுற்றுலாப் பயணிகளின் வருகை புரிந்துள்ளனர். அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் உதகையின் மிகச்சிறந்த சுற்றுலா தலங்களில் ஒன்றான பைக்காரா படகு இல்லத்தில் படகு சவாரி செய்ய சுற்றுலா பயணிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
வார விடுமுறையையொடி தமிழக மட்டுமல்லாமல் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்கள் மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து உதகைக்கு வருகை புரிந்த சுற்றுலா பயணிகள் உதகை பைக்காரா படகு இல்லத்தில் தங்களது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் இயந்திர படகு மற்றும் அதிவேக படகுகளில் இதமான காலநிலையில் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.
Next Story