சிறந்த கல்வி சேவை விருது
மானாமதுரை குட்வில் மெட்ரிக் பள்ளிகளின் தாளாளர் பூமிநாதனுக்கு சிறந்த கல்வி சேவைக்கான விருது வழங்கப்பட்டுள்ளது
மானாமதுரை குட்வில் மெட்ரிக் பள்ளிகளின் தாளாளர் பூமிநாதனுக்கு சிறந்த கல்வி சேவைக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.
.மானாமதுரையில் கடந்த 2002ம் ஆண்டு கிராமப்புற மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் குட்வில் நர்சரி, பிரைமரி பள்ளியாக துவக்கப்பட்டன. இதன் தாளாளராக பூமிநாதன் இருந்து வருகிறார். பின்னர் படிப்படியாக மானாமதுரையில் மெட்ரிகுலேஷன், எம்.கரிசல்குளத்தில் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, எம்.சாலையில் நர்சரி, பிரைமரி பள்ளி, மானாமதுரையில் இன்டர்நேஷனல் நர்சரி பள்ளி உள்ளிட்ட பள்ளிகள் துவக்கப்பட்டு கல்வி சேவை வழங்கப்பட்டு வருகிறது. இப்பள்ளிகள் 20 ஆண்டாக தொடர்ந்து 100 சதவீத தேர்ச்சியை பெற்று வருகிறது.
10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வுகளில் தொடர்ந்து 12 ஆண்டாக மானாமதுரை பகுதிகளில் முதலிடத்தை பெற்றும், அரசு பொதுத்தேர்வுகளிலும் 100 சதவீத தேர்ச்சி பெற்று வருகிறது. கிராமப்புற மாணவர்களின் தனித்திறமையை ஊக்குவித்து, கல்வி தரத்தை மேம்படுத்தும் வகையில் ஆசிரியர்கள் பாடுபட்டு வருகின்றனர். வட்டார, மாவட்ட மற்றும் மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளிலும் இப்பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்று சாதனை படைத்து வருகின்றனர். இத்தொடர் கல்வி சேவையின் பயனாக பள்ளி தாளாளர் பூமிநாதனின் 23 ஆண்டு கால கல்வி சேவையை பாராட்டும் வகையில் மானாமதுரையில் நடைபெற்ற மனித உரிமைகள் களம் நுகர்வோர் அமைப்பு சார்பில் அவருக்கு சிறந்த கல்வி சேவையாளருக்கான விருதும், பதக்கமும் வழங்கப்பட்டது. ஆசிரியர், பெற்றோர் வாழ்த்து தெரிவித்தனர்.