காட்சி பொருளான மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி

காட்சி பொருளான மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி

 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி

கீழ்புத்துப்பட்டு பகுதியில் அமைக்கப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்த கீழ்புத்துப்பட்டு பகுதியில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கக்கூடிய ஸ்ரீ மஞ்சினிஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது, இந்த ஆலயத்திற்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர், இங்கு குடிநீர் பற்றாக்குறை காரணமாக 20 லட்சம் ரூபாயில் பெரிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை அமைத்து 1 ஆண்டுக்கு மேலாகிவிட்டது, இன்று வரை இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பயன்பாட்டிற்கு வராமல் காட்சியளிக்கிறது, எனவே பொதுமக்கள் நலன் கருதி அதை உடனடியாக பயன்படுத்த கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags

Read MoreRead Less
Next Story