மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி குழாய் சேதமடைந்து வீணாகும் தண்ணீர்!

மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி குழாய் சேதமடைந்து வீணாகும் தண்ணீர்!

பொய்கை நல்லூர் ஊராட்சியில் மேல்நிலை நீர் தேக்க தொட்டி குழாய் சேதமடைந்து தண்ணீர் வீணாவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொய்கை நல்லூர் ஊராட்சியில் மேல்நிலை நீர் தேக்க தொட்டி குழாய் சேதமடைந்து தண்ணீர் வீணாவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

காவேரிப்பாக்கம் ஒச்சேரி அடுத்த பொய்கை நல்லூர் ஊராட்சியில் திரவுபதியம்மன் கோவில் அருகே மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது. இங்கிருந்து அந்தப்பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களாக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் உள்ள குழாய் சேதமடைந்து தண்ணீர் வெளியேறி வீணாகி வருகிறது.

இது தொடர்பாக ஊராட்சி நிர்வாகத்திடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்க வில்லை என பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். வெளியேறும் தண்ணீர் ஆங்காங்கே தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி வருகிறது. தொடர்ந்து நீர் வெளியேறுவதால் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளது என்றும், குடிநீர் வீணாவதை தடுக்க அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story