எருது விடும் திருவிழா

எருது விடும் திருவிழா

கெஜிலிபொம்மன்பட்டியில் பல்லக்குடும்பன் சுவாமிக்கு சாட்டுதல் விழாவை முன்னிட்டு எருது விடும் வைபவம் நடந்தது.

கெஜிலிபொம்மன்பட்டியில் பல்லக்குடும்பன் சுவாமிக்கு சாட்டுதல் விழாவை முன்னிட்டு எருது விடும் வைபவம் நடந்தது.
திண்டுக்கல் குஜிலியம்பாறை தாலுகா, மல்லபுரம் ஊராட்சி கெஜிலிபொம்மன்பட்டியில் இராஜகம்பளம் சமுதாய மக்களுக்கு பாத்தியப்பட்ட பல்லக்குடும்பன் சுவாமிக்கு சாட்டுதல் நடைபெற்றது .பெண்கள் அனைவரும் பழங்கள் கொழுக்கட்டைகள் மூங்கில்கூடையில் சுமந்து கொண்டு பாட்டுபாடி வந்தார்கள். ஆண்கள் அனைவரும் எருதுகளை பிடித்துகொண்டு உருமி தாரை தப்பாட்டை முழங்க கோவில் வந்ததும் பூசைகள் நடைபெற்றது .ஆண்கள் அனைவரும் சேர்வையாட்டம் ஆடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.தேவேந்திர சமுதாயத்தில் பிறந்து இறந்த பல்லக்குடும்பன் சுவாமியை பல நூற்றாண்டாக கம்பள சமுதாய ஒருபிரிவு மக்கள் குல தெய்வமாக வணங்கி வருவது காண்போர் அனைவரையும் வியக்க வைத்தது.

Tags

Next Story