திருப்பத்தூர் அருகே எருதுவிடும் திருவிழா: போலீசார் வழக்கு பதிவு

திருப்பத்தூர் அருகே எருதுவிடும் திருவிழா: போலீசார் வழக்கு பதிவு
எருது விடும் விழா
திருப்பத்தூர் அருகே அனுமதி இன்றி நடைபெற்ற எருதுவிடும் திருவிழா தடுத்து நிறுத்திய போலீசார்.

திருப்பத்தூர் அடுத்த கூடப்பட்டு பகுதியில் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு எருதுவிடும் திருவிழா ஊர் பொதுமக்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் வாடி வாசல் வழியாக காளைகள் சீறிப்பாய்ந்து ஓடியது. இந்த எருதுவிடும் திருவிழாவிற்கு வருவாய்த்துறை இடமும் காவல்துறையிடமும் உரிய அனுமதி பெறவில்லை என கூறப்படுகிறது.

இது குறித்து தகவல் அறிந்த குருசிலாப்பட்டு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று எருதுவிடும் திருவிழாவை தடுத்து நிறுத்தினர். மேலும் இதுகுறித்து திருப்பத்தூர் வட்டாட்சியர் ஆனந்தகிருஷ்ணன் மற்றும் திருப்பத்தூர் டிஎஸ்பி செந்தில் ஆகியோர் நேரில் விசாரணை நடத்தி வருகின்றனர். அனுமதி இன்றி எருதுவிடும் திருவிழா நடத்திய சம்பவம் திருப்பத்தூர் சுற்றுவட்டார பகுதியில் இன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விழா குழுவை சேர்ந்த 10 க்கும் மேற்பட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story