பாதையாத்திரை பக்தர்கள் கண்கவர் நடனம்

பாதையாத்திரை பக்தர்கள் கண்கவர் நடனம்

பாதயாத்திரை பக்தர்கள் கண்கவர் நடனம்

பழனிக்கு செல்லும் பாதையாத்திரை பக்தர்கள் கண்கவர் நடனங்களை ஆடி செல்வது பக்தி பரவசத்தின் உச்சிக்கே சென்றுள்ளது.

வேடசந்தூர் வழியாக பழனி பாதயாத்திரை செல்லும் பெண் பக்தர்களின் கண் கவர் நடனம் ஆடி மகிழ்ந்தனர். திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் ஆத்துமேடு வழியாக பழனி பாதையாத்திரை சென்ற திருச்சி மாவட்டம் அரியமங்கலம் பகுதியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் பக்தி பாடலை பாட விட்டு பாடலின் இசைக்கு ஏற்றார் போல் அனைவரும் ஒரே மாதிரியாக நடனமாடி சென்றனர்.இதனை கண்ட அப்பகுதி பொதுமக்கள் அவர்களது நடனத்தைக் கண்டு மெய் சிலிர்த்தனர். மேலும் பக்தி பரவசத்தில் அரோகரா கோஷம் விண்ணை முழங்க நடனங்களை ஆடினர்.

Tags

Next Story