நெல் பயிராக வராமல் பதராக மாறியதால் விவசாயி கவலை

நெல் பயிராக வராமல் பதராக மாறியதால்  விவசாயி கவலை

நெல்

நாகை மாவட்டம் திருமருகல் அருகே நெல் பயிராக வராமல் பதராக மாறியதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

மாவட்டம் திருமருகல் அருகே நெல் பயிராக வராமல் பதராக மாறியதால் விவசாயி கவலை

நாகை மாவட்டம், திருமருகல் ஒன்றியப் பகுதிகளில் விவசாயிகள் தற்போது ஆழ்துளை கிணறுகள் மூலம் கிடைக்கும் தண்ணீரை பயன்படுத்தி குறுவை சாகுபடி பணிகளில் ஈடுபட்டு வருகிறது. அதேபோல் அம்பல் ஊராட்சி தேவாதிநல்லூர் பகுதியை சேர்ந்த விவசாயி செல்வராஜ் என்பவர் கோ-53 என்ற நெல் விதையை கணபதிபுரம் வேளாண் விரிவாக்க மையத்தில் வாங்கி தனக்கு சொந்தமான இரண்டு ஏக்கர் நிலப்பரப்பில் பயிர் செய்தார்.

நெல் பயிர் தற்போது 60 முதல் 80 நாட்களில் பூத்து கதிர் வந்த நிலையில் அவை நெல் கதிராக வராமல் முற்றிலும் பதறாக மாறி உள்ளது.110 நாட்களில் அறுவடை வர வேண்டிய நெற்பயிராகும். வேளாண்மை துறை மூலம் உரிய பரிசோதனை செய்யப்பட்டு சான்றளிக்கப்பட்ட பின் தான் விவசாயி அந்த வகை நெல் விதைகளை வாங்கி பயிர் செய்தார்.

இவ்வாறு பயிர் செய்யப்பட்ட நெல் பயிராக வராமல் பதராக மாறி உள்ளன.இதனால் விவசாயி அதிர்ச்சி அடைந்துள்ளார்.மேல் உரம் முறையாக இட்ட நிலையிலேயே கதிர்கள் வர தொடங்கி இருப்பதால் விவசாயிகள் பெரும் இழப்பை சந்திக்க வேண்டி உள்ளது.இதற்கான காரணம் தெரியாமல் விவசாயிகள் விழி பிதுங்கி நிற்கின்றனர்.

ரகம் மாறி விட்டதா? அல்லது மரபியல் காரணமா? என்பது தெரிய வில்லை. இது குறித்து துறை அதிகாரிகளுக்கு புகார் செய்துள்ளனர்.வேளாண் பல்கலைக்கழக வல்லுனர் குழு மூலம் முழுமையாக கள ஆய்வு செய்து எதிர்காலங்களில் இது போன்ற பாதிப்புகள் ஏற்படாத வண்ணம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மேலும் ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்றும் விவசாயிகள் கூறி உள்ளனர்.

Tags

Next Story