கல்குவாரியால் நெல் பயிா்கள் பாதிப்பு: விவசாயிகள் கவலை

கல்குவாரியால் நெல் பயிா்கள் பாதிப்பு: விவசாயிகள் கவலை

நெல் வயல் 

ஆலங்குளம் அருகே கல்குவாரியில் இருந்து காற்றில் பறந்து விழும் பாறை பொடிகளால் பயிர்கள் சேதமடைவதாக விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர்.
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகேயுள்ள ஆண்டிப்பட்டியில் தனியாா் கல் குவாரி உள்ளது. இங்கிருந்து நாள்தோறும் ஏராளமான டன் ஜல்லிகற்கள் எடுக்கப்படுகிறது. மேலும் பாறைப் பொடிகள் தயாா் செய்யப்பட்டு உள்ளூா் மற்றும் கேரளத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது. இந்நிலையில் குவாரியில் இருந்து எழும் பாறைப் பொடி துகள்கள் இந்தக் குவாரியைச் சுற்றி நெல் பயிரிட்டுள்ள விவசாய நிலங்களில் படலமாக படா்கிறது. இதனால் இப்பகுதியைச் சுற்றியுள்ள சுமாா் 100 க்கும் மேற்பட்ட ஏக்கா் நெற்பயிா்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலை தொடா்ந்தால் இதில் விளைச்சல் காண முடியாது. எனவே குவாரி நிா்வாகம் பாறைப்பொடி மேலெழாதவாறு போதிய தண்ணீா் தெளித்து பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் விவசாயத்துக்கு பாதிப்பு ஏற்படுத்தாவண்ணம், நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனா்.

Tags

Next Story