தேனி மாவட்டத்தில் 5630 ஹெக்டர் பரப்பில் நெல் சாகுபடி

தேனி மாவட்டத்தில் 5630 ஹெக்டர் பரப்பில் நெல் சாகுபடி

ஆட்சியர் அலுவலகம்

நடப்பு பருவத்தில் விவசாயிகளுக்கு 95.45 மெ.டன் நெல்விதை விநியோகிக்கப்பட்டுள்ளதாக என தேனி ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

தேனி மாவட்டத்தில் நடப்பாண்டு நெல் இதுவரை 5,630 ஹெக்டர் பரப்பிலும், சிறுதானியங்கள் 3,184 ஹெக்டரிலும், பயறுவகைகள் 1,834 ஹெக்டரிலும், பருத்தி 745 ஹெக்டரிலும், எண்ணெய்வித்து பயிர்கள் 941 ஹெக்டரிலும், கரும்பு 2,172 ஹெக்டரிலும் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. வேளாண்மை விரிவாக்க மையங்கள் மூலமாக நடப்பு பருவத்தில் விவசாயிகளுக்கு நெல்விதை இதுவரை 95.45 மெ.டன் விநியோகிக்கப்பட்டுள்ளது என தேனி ஆட்சியர் தெரிவித்துள்ளார்.




Tags

Next Story