காட்டுப்பன்றிகளால் நெற்பயிர் சேதம்: சாத்தணஞ்சேரி விவசாயிகள் சோகம்

காட்டுப்பன்றிகளால் நெற்பயிர் சேதம்: சாத்தணஞ்சேரி விவசாயிகள் சோகம்

சேதமடைந்த பயிர்கள்

சாத்தணஞ்சேரியில் காட்டுப்பன்றிகளால் நெற்பயிர் சேதமடைவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியம் சாத்தணஞ்சேரியில், ஆழ்துளை கிணற்று பாசனத்தை கொண்டு, அப்பகுதி விவசாயிகள் சம்பா பட்டத்திற்கு, பல ஏக்கர் பரப்பிலான விவசாய நிலங்களில் நெற்பயிர் சாகுபடி செய்துள்ளனர்.

கடந்த செப்டம்பர் மாதம் நடவு செய்த பயிர்கள், தற்போது அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளன. இந்நிலையில், சாத்தணஞ்சேரி ஏரியில் தண்ணீர் இல்லாததால், முட்புதர்கள் வளர்ந்து உள்ளது. அந்த புதர்களில் காட்டுப்பன்றிகள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன.

இவை, இரவு நேரங்களில் விவசாய நிலங்களில் புகுந்து நெற்பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. இரவு நேரத்தில் நெற்பயிருக்கு காவல் இருந்தும்,கூட்டம் கூட்டமாக விளைநிலங்களில் புகுந்து பயிர்களை நாசப்படுத்தும்காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த முடியவில்லை என, இப்பகுதி விவசாயிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

மேலும், பருவ மழை நேரத்தில், கனமழைக்கு தப்பிய நெற்பயிர்கள், காட்டுப்பன்றிகள் வசமிருந்து பாதுகாக்க முடியவில்லை என, விவசாயிகள் புலம்பி வருகின்றனர்."

Tags

Next Story