நெல் நேரடி விதைப்பு செயல்முறை விளக்க முகாம்

நெல் நேரடி விதைப்பு செயல்முறை விளக்க முகாம்

நெல் விதைப்பு பயிற்சி முகாம் 

குமாரபாளையத்தில் நெல் நேரடி விதைப்பு செயல்முறை விளக்க முகாம் நடந்தது.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே சீராம்பாளையம் பகுதியில் நெல் நேரடி விதைப்பு செயல்முறை விளக்க முகாம் வேளாண்மைத்துறை சார்பில், வேளாண்மை உதவி இயக்குனர் ஜெயமணி தலைமையில் நடந்தது. வேளாண்மை அலுவலர் மாயஜோதி பேசியதாவது: இந்த நேரடி நெல் விதைப்பு மூலம், ஆள் பற்றாக்குறை போக்குதல், அதிக கூலி கொடுக்க வேண்டியது, நாற்றங்கால் விடுதல், நாற்றங்கால் பராமரிப்பு, நடவு பணி, பயிர் சாகுபடிக்கு குறுகிய நாட்கள், செலவு குறைவு என பல்வேறு நன்மைகள் உள்ளன. இதில் மாப்பிள்ளை சம்பா, தூய மல்லி ஆகிய நெல் ரகங்கள் பயிரிடப்படுகிறது. இங்குள்ள ரவி என்பவரது 1.15ஏக்கர் நிலத்தில் இந்த நெல் நடவு செய்யப்படுகிறது. இவ்வாறு அவர் பேசினார். ஜெயமணி பேசியதாவது: வேளாண்மைத்துறையில், பல உதவிகள் தமிழக அரசால் உழவர்களுக்கு வழங்கப்படுகிறது. இதனை பயன்படுத்தி கொள்ள வேண்டுகிறேன். இவ்வாறு அவர் பேசினார். இப்பகுதியில் உள்ள ஏராளமான விவசாயிகள் இந்த செயல்முறை விளக்க முகாமில் பங்கேற்று பயன்பெற்றனர்.

Tags

Next Story