ஸ்ரீரங்கம் கோயிலில் நெல்லளவு கண்டருளும் நிகழ்ச்சி

ஸ்ரீரங்கம் கோயிலில் நெல்லளவு கண்டருளும் நிகழ்ச்சி

நெல்லளவு கண்டருளும் நிகழ்ச்சி

ஸ்ரீரங்கம் கோயில் தைத்தோ் திருவிழாவில் இன்று நெல்லளவு கண்டருளும் நிகழ்ச்சி நடைபெற்றது.

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நடைபெற்று வரும் தைத்தோ் திருவிழாவின் 7 ஆம் நாளான திங்கள்கிழமை நம்பெருமாள் நெல்லளவு கண்டருளும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

இக்கோயிலில் கடந்த 16 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய தைத்தோ் திருவிழா வரும் 26 ஆம் தேதி வரை 11 நாள்கள் நடைபெறவுள்ளது. விழா நாள்களில் காலை, மாலைகளில் நம்பெருமாள் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி, உள்திருவீதிகளில் வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலிக்கிறாா்.

இந்நிலையில் விழாவின் 7 ஆம் நாளான திங்கள்கிழமை மாலை 6.30 மணிக்கு நம்பெருமாள் உபயநாச்சியாா்களுடன் திருச்சிவிகையில் புறப்பட்டு, திருக்கொட்டாரத்தின் எதிரேயுள்ள மண்டபத்தில் எழுந்தருளி நெல்லளவு கண்டருளுகிறாா். பின்னா் அங்கிருந்து புறப்பட்டு உள்திருவீதி வலம் வந்து, ஆழ்வான் திருச்சுற்று வழியாக தாயாா் சன்னதிக்கு இரவு 9 மணிக்கு வந்து சேருகிறாா்.

தொடா்ந்து திருமஞ்சனம் கண்டருளி செவ்வாய்க்கிழமை அதிகாலை 1 மணிக்கு கண்ணாடி அறை சென்று சேருகிறாா். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தைத் தேரோட்டம் வரும் புதன்கிழமை (ஐன.24) காலை 6.30 மணிக்கு நடைபெறவுள்ளது.

Tags

Next Story