வத்திராயிருப்பு சுற்று வட்டார பகுதிகளில் நெல் அறுவடை துவக்கம்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வத்திராயிருப்பு சுற்று வட்டார பகுதிகளில் நெல் அறுவடை துவங்கியுள்ளது. நெற்களம் இல்லாததால் விவசாயிகள் சாலைகளில் அறுவடை செய்ய நெல்லை உலர வைத்து வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான கான்சாபுரம்,அத்திகோவில் , ரகுமத் நகர், கொடிக்குளம் நெடுங்குளம்,தாணிப்பாறை,மாத்தூர், மகாராஜபுரம்,தம்பிபட்டி இழந்தைகுளம், கோட்டையூர், சுந்தரபாண்டியம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விவசாயிகள் முதல் போக நெல் மற்றும் இரண்டாம் போக நெல் விவசாயம் செய்து வருகின்றனர்.

இப்பகுதியில் மேலும் தற்பொழுது விவசாயி இரண்டாம் போக நெல் நடவு பணியினை மேற்கொண்டு தற்போது நெற்பயிர்கள் கதிர் விட்டு விளைந்து அறுவடைக்கு தயாராக உள்ளது.இரண்டாம் போக கோடை நெல் அறுவடை தொடங்கியுள்ள விவசாயிகள் தற்போது நெற்களம் இல்லாததால் நெடுஞ்சாலைகளில் உள்ள சாலைகளில் அறுவடை செய்யப்பட்ட நெல்லினை உலர வைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அவ்வாறு விவசாயிகள் அறுவடை செய்யப்பட்ட நெல்லை உலர வைக்கும் போது நெடுஞ்சாலைத்துறையினர் சாலை சேதம் அடைவதாக கூறி உலர வைக்கும் நெல்லினை அகற்ற சொல்லியும் தங்களுக்கு நெருக்கடி கொடுக்கப்பதாகவும் குற்றம் சாட்டுகின்றனர்.

இது குறித்து விவசாயி கூறுகையில்: வத்திராயிருப்பு தாலுகா பொருத்தளவு இரண்டு போக நெல் விளைச்சலை இப்பகுதியில் உள்ள விவசாயிகள் செய்து வருகிறோம்.இப்பகுதி உள்ள விவசாயி போதுமான நெல் களம் இல்லாததால் அறுவடை செய்யப்படும் நெல் நெடுஞ்சாலைதுறை சாலையில் குவித்து வைத்து வருகிறோம் இதனால் தங்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருவதாகவும் தங்களுக்கு சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகம் தலையிட்டு இப்பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு நெற்களம் அமைத்துக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story