தாராபுரம் பகுதியில் நெல் அறுவடை பணிகள் தீவிரம்

தாராபுரம் பகுதியில் நெல் அறுவடை பணிகள் தீவிரம்

தாராபுரம் பகுதியில் நெல் அறுவடை பணிகள் தீவிரம்

தாராபுரம் பகுதியில் நெல் அறுவடை பணிகள் தீவிரமாக தொடங்கி நடைபெற்று வருகிறது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அலங்கியம் தளவாய்பட்டினம் கொளத்துபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 8000 ஏக்கர் பாசன பரப்பளவில் கடந்த ஆண்டு நெல் சாகுபடி செய்யப்பட்டது இந்த ஆண்டு போதிய மழையும் அணையில் நீர் வரத்து இல்லாததாலும் சுமார் 4000 ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டு தற்போது அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மேலும் அலங்கியம் பாசன சங்கத் தலைவர் ஈஸ்வரமூர்த்தி கூறுகையில் செப்டம்பர் அக்டோபர் மாதங்களில் மழை பெய்து அமராவதி அணையில் உள்ள நீர் இருப்பையும் பயன்படுத்தி வருடம் தோறும் அமராவதி பாசன விவசாயிகள் நெல் சாகுபடியில் ஈடுபடுவது வழக்கம் ஆனால் தற்போது இந்த ஆண்டு போதிய மழை இல்லாத காரணத்தாலும் அமராவதி அணையில் தண்ணீர் வரத்து இல்லாத காரணத்தாலும் டிசம்பர் மாதத்தில் விவசாயிகள் 8000 ஏக்கருக்கு பதிலாக சுமார் 4000 ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடியில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் தற்போது அறுவடைப்பணியில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அறுவடை செய்த நெல் மணிகளை நுகர்வோர் வாணிப கழகத்தின் மூலமாக ஒரு கிலோ 23.60 க்கு கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது இதனால் நெல் பயிரிடப்பட்ட விவசாயிகள் மிகவும் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர்.

Tags

Next Story