விளையாட்டுத்துறையில் சாதனை புரிந்தவர்களுக்கு பத்ம விருது

விளையாட்டுத்துறையில் சாதனை புரிந்தவர்களுக்கு பத்ம விருது

மாவட்ட ஆட்சியர்

நாகப்பட்டினம் மாவட்டம் விளையாட்டுத்துறையில் தேசிய மற்றும் பன்னாட்டு அளவில் சாதனை புரிந்தவர்களுக்கு 2025-ஆம் ஆண்டிற்கு பத்ம விருதுகள் கலெக்டர் தெரிவித்துள்ளார்.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் சாதனை புரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் .ஜானி டாம் வர்கீஸ் தகவல் பத்ம விருதுகள் (Padma Awards) தேசிய மற்றும் பன்னாட்டு அளவில் பல்வேறு துறைகளில் தலைச் சிறந்தவர்களாகவும்,

தனிநபராக சாதனை புரிந்தவர்களாகவும் இருத்தல் வேண்டும். அதாவது கலை, இலக்கியம், இசை, பெயிண்டிங், சிற்பத்திறன், போட்டோ கிராஃடம். சினிமா ஆகிய துறையினர் தேசிய அளவில் தன் திறமைகளை நிரூபித்தவர்களாக இருத்தல் வேண்டும். பொது நலத்தொண்டு,

தன்னார்வத் தொண்டு சாதி சமய தொண்டாற்றியவர்கள். பொது மக்கள் சேவை, சட்டம், பொது வாழ்க்கை, அரசியல் ஆகியவற்றில் சேவை புரிந்தவர்கள், அறிவியல், பொறியியல், விண்வெளி ஆராய்ச்சி, நியூக்கிளியர் அறிவியல் ஆகிய துறைகளில் சாதனை படைத்தவர்கள், நாட்டு வணிகம் மற்றும் தொழிற்சாலை, வங்கி, பொருளாதாரம், சுற்றுலா ஆகிய துறைகளில் சாதனை படைத்தவர்கள், மருத்துவ ஆராய்ச்சி, ஆயுர்வேதா,

ஹோமியோபதி, சித்தா, அலோபதி, இயற்கை வைத்தியம் ஆகியவற்றில் சாதனை புரிந்தவர்கள் மற்றும் புதிய கண்டுபிடிப்பை நிகழ்த்தியவர்கள். கல்வி, பத்திரிக்கை, கல்வி கற்பித்தல், நாவல், கவிதை, பாடல்,

கல்விக்கான முன்னேற்ற சேனை ஆகியவற்றில் சாதனை படைத்தவர்கள். அரசாங்கத்தில் மேனேஜ்மென்ட், நிர்வாகம் மற்றும் அரசாங்கம் மேம்பாடு அடைய செய்தவர்கள், விளையாட்டுத்துறையில் தேசிய / பன்னாட்டு அளவில் பதக்கம் பெற்றவர்கள், மலையேற்றம், விளையாட்டுத்துறையை மேம்படுத்தியவர்கள், விளையாட்டினை ஊக்கப்படுத்தியனர்கள்,

பன்னாட்டு அளவில் போட்டிகளை சிறப்பாக நடத்தியவர்கள், பன்னாட்டு அளவில் யோகாவில் பதக்கம் பெற்றவர்கள், இந்திய கலாச்சாரம், மனித உரிமை நிலை நாட்டல், வன பாதுகாப்பு மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் காப்பாற்றுதல் போன்ற சாதனைகளை நிகழ்த்தியவர்களுக்கு பத்ம விருதுகள் அதாவது பத்ம ஸ்ரீ, பத்ம விபூசன், பத்ம பூசன் ஆகிய விருதுகள் இந்திய அரசால் வழங்கப்படவுள்ளது. எனவே. நாகப்பட்டினம் மாவட்டத்தில் விளையாட்டுத் துறையில் தேசிய மற்றும் பன்னாட்டு அளவில் சாதனை புரிந்தவர்கள் மட்டும்,

விண்ணப்பங்கள் மற்றும் இதர விவரங்களை https://awards.gov.in என்ற இணையதளம் மூலம் பெற்றுக் கொள்ளலாம். தகுதியான நபர்கள் விண்ணப்பத்தினை https://awards.gov.in என்ற இணையதள முகவரியில் 30.06.2024-க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story