பத்மநாபபுரம் கூட்டு குடிநீர் திட்ட குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்.
வீணாகும் குடிநீர்
கன்னியாகுமரி மாவட்டத்தில் பத்மநாபபுரம் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் வழங்கும் பொருட்டு சுமார் 232 கோடியில் பணிகள் தொடங்கின. அப்பணிகள் கடந்த சில மாதங்களுக்கு முன் முடிந்தது.
இந்நிலையில் தற்போது புதிதாக குழிக்கோடு அருகே வாழ்வச்சகோஷ்டம் "பி" கிராம அலுவலகத்தின் முன் சாலையோரம் அமைக்கப்பட்டிருந்த குடிநீர் குழாய் உடைந்து குடிநீர் வீணாகி வருகிறது. அந்த குடிநீர் சாலையிலும் பீறிட்டு பாய்ந்து வருகிறது. அப்பகுதியில் செல்லும் கார்கள் பீறிட்டு வரும் குடிநீரில் தங்கள் காரை கழுவி செல்லும் காட்சிகளையும் காண முடிந்தது.
குடிநீர் தட்டுப்பாட்டை போக்க தமிழக அரசு கூட்டுக் குடிநீர் திட்டங்களை செயல்படுத்தி வரும் நிலையில் பணிகள் முடிந்து சில மாதங்களே ஆன பத்மநாபபுரம் கூட்டு குடிநீர் திட்ட பைப் உடைந்ததை உடனடியாக சீர் செய்து வீணாகும் குடிநீரை பாதுகாக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கருத்தாக உள்ளது.