கள்ளகுறிச்சி : கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் பெருமாள் கோவிலில் பகல் பத்து உற்சவம்

X
பகல்பத்து உற்சவம்
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பகல் பத்து உற்சவம் நடைபெற்று வரும் நிலையில் நாளை புண்டரீகவல்லி தாயார் சமேத தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் சொர்க வாசல் திறப்பு நடைபெற உள்ளது
கள்ளக்குறிச்சி புண்டரீகவல்லி தாயார் சமேத தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் பகல் பத்து உற்சவம் நடக்கிறது. வைகுண்ட ஏகாதசியையொட்டி பகல் 10உற்சவம் கடந்த 13ம் தேதி முதல் இன்று22ம் தேதி வரை நடக்கிறது. நாள்தோறும் மாலையில் பெருமாள் தாயார் உற்சவர்களுக்கு சிறப்பு அபிஷேகஆராதனை நடத்தி கோவில் உட்பிரகாரம் புறப்பாடு நடக்கிறது. மேலும், சேவை சாற்றுமுறை, பகவத் சங்கல்பத்துடன் பகல் 10 உற்சவ பூஜை நடக்கிறது. 9ம் நாளான நேற்று சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நாளை 23ம் தேதி அதிகாலை 5:00 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது.
Next Story
