வேகத்தடைக்கு பெயின்ட் அடிக்கல... கோர்ட்டில் நகராட்சி ஆணையாளர் ஆஜர்

வேகத்தடைக்கு பெயின்ட் அடிக்கல... கோர்ட்டில் நகராட்சி ஆணையாளர் ஆஜர்

 வேகத்தடைக்கு பெயின்ட் அடிக்காத விவகாரம் தொடர்பாக, ஊட்டி நகராட்சி ஆணையாளர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்.

வேகத்தடைக்கு பெயின்ட் அடிக்காத விவகாரம் தொடர்பாக, ஊட்டி நகராட்சி ஆணையாளர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்.

நீலகிரி மாவட்டம் ஊட்டி தமிழகம் மாளிகை பகுதியில் மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகம், வி.சி காலனி வழியாக மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றம் செல்லும் சாலையில் சுமார் 10 இடங்களில் வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது. இந்த வேகத் தடைகளுக்கு வர்ணம் பூசப்படவில்லை. மேலும், வேகத்தடை இருப்பதாக, அறிவிப்பு பலகையும் இல்லாததால் விபத்து அபாயம் இருந்தது. இது குறித்து நடவடிக்கை எடுக்க பல்வேறு தரப்பினர் வலியுறுத்தியும் நகராட்சி நிர்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எ

னவே நகராட்சி நிர்வாகத்தின் இந்த மெத்தன போக்கை கண்டித்து மக்கள் சட்ட மைய இயக்குநரும் வழக்கறிஞருமான விஜயன் ஊட்டியில் உள்ள நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் மனுத்தாக்கல் செய்தார். இதற்கு இடையே தற்போது வேகத்தடைக்கு வர்ணம் பூசப்பட்டது. இந்நிலையில் இந்த மனு விசாரணைக்கு வந்தது. இதற்கு நகராட்சி ஆணையார் ஏகராஜ் நேரில் ஆஜரானார். இதில் தரமற்ற முறையில் பெயரளவிற்கு வெள்ளையடிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.

எனவே இந்த வழக்கில் நகராட்சி பொறியாளர் மற்றும் ஒப்பந்ததாரரையும் சேர்க்க கோரி மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இதுகுறித்து வழக்கறிஞர் விஜயன் கூறுகையில்," நீதிமன்றத்திற்கு செல்லக்கூடிய சாலையில் கூட சரியான முறையில் நகராட்சியில் நிர்வாகம் பணியாற்றவில்லை. அவசர அவசரமாக தொடங்கப்பட்ட பணிகளும் சரிவர மேற்கொள்ளப்படவில்லை. இதனால் நகராட்சி பொறியாளர், ஒப்பந்ததாரர் ஆகியோரையும் வழக்கில் சேர்க்க வேண்டும் என குறிப்பாணை தாக்கல் செய்துள்ளேன். விரைவில் இந்த மனுவும் விசாரணைக்கு வரும்," என்றார். .....

Tags

Next Story