பெயின்ட் கடை உரிமையாளருக்கு கத்தி குத்து
குமரி மாவட்டம், கொல்லங்கோடு அருகே வள்ளவிளை பகுதியை சேர்ந்தவர் ராபின்சன் (47). அந்த பகுதியில் பெயிண்ட் கடை நடத்தி வருகிறார். இவரது மனைவியை அதே ஊரை சேர்ந்த பெபி பெர்னாண்டஸ் என்பவர் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு தாக்கியதாக போலீஸ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கை வாபஸ் பெற வேண்டும் என ராபின்சனிடம் நேற்று முன்தினம் இரவு பெபி பெர்னாண்டஸ் வலியுறுத்தி தகராறு செய்துள்ளார். இதற்கு ராபின்சன் மறுக்கவே, ஆத்திரமடைந்த பெபி பெர்னாண்டஸ் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ராபின்சனை குத்தி விட்டு தப்பியோடி விட்டார்.
இதில் படுகாயம் அடைந்த ராபின்சன் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இது சம்பந்தமான புகாரின் பேரில் கொல்லங்கோடு போலீசார் பெபிபெர்னாண்டஸ் மீது வழக்கு பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.