வாலிபர் கொலை செய்த வழக்கில் பெயிண்டர் கைது

வாலிபர் கொலை செய்த வழக்கில் பெயிண்டர் கைது

பெயிண்டர் கொலைவழக்கில் ஒருவர் கைது

காவல்துறை விசாரணையில் பல தகவல்கள் வெளிவந்துள்ளன

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த தூசி நத்தகொல்லையை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 30). சென்னையில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார்.இவர் கடந்த நவம்பர் மாதம் 2-ந் தேதி நண்பர் வீட்டுக்கு சென்று வருவதாக குடும்பத்தினரிடம் கூறிவிட்டு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.

வெம்பாக்கத்தில் காஞ்சிபுரம்- கலவை சாலையில் தனியார் பள்ளி எதிரே குளக்கரையில் செல்வராஜ் ரத்த காயங்களுடன் இறந்து கிடப்பதாக பிரம்மதேசம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தனர்.அப்போது செல்வராஜின் தலையில் வெட்டு காயங்கள் இருந்தது. வாலிபரை மர்ம நபர் யாரோ சரமாரியாக அடித்தும், கல்லால் தாக்கி கொலை செய்தது தெரியவந்தது.

மேலும், அவரது பைக் மற்றும் செல்போன் உள்ளிட்டவை காணாமல் போனது.இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதில் காணாமல் போன செல்வராஜின் செல்போன் எண்ணை வைத்து விசாரணை நடத்தினர். அப்போது அந்த போன் சென்னையில் சர்வீஸ் செய்ய கொடுக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.அந்த செல்போனை சர்வீஸ் செய்ய கொடுத்த வெம்பாக்கம் ஜே.ஜே.நகரை சேர்ந்த செல்வம் (40), பெயிண்டரை பிடித்து விசாரணை நடத்தினர்.

அதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்களை வெளியானது. நண்பர்களான செல்வராஜும், செல்வமும் சேர்ந்து கொலை நடந்த அன்று ஒன்றாக மது அருந்தி உள்ளனர்.அப்போது செல்வராஜ் பைக்கை செல்வம் கேட்டார். தர மறுக்கவே, 2 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.இதனால் ஆத்திரமடைந்த செல்வம் அருகில் இருந்த கல்லை எடுத்து, செல்வராஜ் தலையில் ஓங்கி அடித்தார். இதில் செல்வராஜ் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார். போலீசிடம் மாட்டிக் கொள்ளாமல் இருக்க செல்வராஜ் பைக் மற்றும் செல்போனை எடுத்துக் கொண்டு, செல்வம் அங்கிருந்து தப்பி ஓடு விட்டார்.

செல்போனில் விவரங்களை அழிக்க சென்னையில் உள்ள ஒரு கடையில், சர்வீஸ் செய்ய செல்வம் கொடுத்ததும் தெரிய வந்தது. இதன் எடுத்து போலீசார் செல்வத்தை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags

Next Story