கருங்கல் அருகே பெயின்டர் அடித்து கொலை

கருங்கல் அருகே பெயின்டர் அடித்து கொலை
X
பைல் படம்
கருங்கல் அருகே பெயின்டர் அடித்து கொலை செய்யப்பட்டார்.

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே பூவன்சந்திப் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் குமார் (44). இவர் பெயிண்டிங் வேலை செய்து வருகிறார். கடந்த 1-ம் தேதி கருங்கல் பஸ் நிலையம் அருகில் உள்ள டாஸ்மாக் கடைக்கு மது குடிக்க சென்றுள்ளார்.

அப்போது அங்கு அதே பகுதி ஆர் சி தெருவை சேர்ந்த சுபாஷ் (30, ஜான் (37, ஜெனிபர் (32, அனஞ்சிக்கோடு பகுதியை சேர்ந்த மகேஷ் (35) பட 5 பேர் கொண்ட கும்பல் அங்கு நின்று கொண்டு இருந்தனர்.

அப்போது சுபாஷ் உட்பட ஐந்து பேரும் சுரேஷ் குமாரை வழிமறித்து குடிக்க பணம் கேட்டுள்ளனர். சுரேஷ்குமார் பணம் இல்லை என்று கொடுக்க மறுத்து விட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த ஐந்து பேரும் கும்பலாக சேர்ந்து சுரேஷ்குமாரை சரமாரியாக தாக்கியதாக தெரிகிறது. இதில் சுரேஷ்குமார் .தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

அதைத் தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்துவிட்டு அங்கிருந்து சென்று விட்டனர். இதையடுத்து சுரேஷ்குமார் உறவினர்கள் அவரை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த சம்பவம் தொடர்பாக கருங்கல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர்.

இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலையில் சுரேஷ்குமார் உயிரிழந்தார். இதையடுத்து போலீசார் இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி தலைமறைவான ஐந்து நபர்களையும் தேடி வருகின்றனர்.

Tags

Next Story