மனைவி பிரிந்து சென்ற மனவேதனையில் பெயின்டர் தற்கொலை

மனைவி பிரிந்து சென்ற மனவேதனையில் பெயின்டர் தற்கொலை

குலசேகரம் அருகே மனைவி பிரிந்து சென்ற மனவேதனையில் பெயின்டர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 

குலசேகரம் அருகே மனைவி பிரிந்து சென்ற மனவேதனையில் பெயின்டர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

குலசேகரம் அருகேசெருப்பாலூர் அயக்கோடு மடத்து வீடு பகுதியை சேர்ந்தவர் பிரேமன் பெயிண்டர். அவருக்கு திருமணமாகி சரண்யா என்ற மனைவி உள்ளார். சரண்யா நாகர்கோவிலில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்து வருகிறார். கருத்துவேறுபாடு காரணமாக கடந்த 10 மாதங்களுக்கு முன்பு சரண்யா தனது கணவரை விட்டு பிரிந்து சென்று கேசவன்புதூரில் உள்ள தனது தாயார் வீட்டில் தங்கியிருக்கிறார். ஆனால் மனைவி பிரிந்து சென்றதில் இருந்தே பிரேமன் மிகுந்த மன உளைச்சலில் இருந்துள்ளார்.

அடிக்கடி சரண்யாவுக்குபோனில் பேசி நீ என்னுடன் வந்துவிடு என கூறுவாராம். இந்த நிலையில் சரண்யாவைசெல்போனில் தொடர்பு கொண்ட பிறேமன், நீ இங்கே வர வில்லை என்றால் நான் வேறு எங்காவது சென்று விடுவேன் எனக்கூறிவிட்டு தொடர்பை துண்டித்துள்ளார்.ஆனால் சரண்யா இதனை பெரிதாக எடுத் துக்கொள்ளவில்லை. இந்த நிலையில் காலை பிறேமன் தங்கியிருந்த வீட்டின் கதவு நீண்டநேரம் திறக்காததால் அக்கம்பக்கத்தினர் உள்ளே சென்று பார்த்தனர்.

பிரேமன்அப்போது படுக்கையறையில் உள்ள மின்விசிறியில் சேலையால் தூக்கிட்டு பிறேமன் பிணமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.இதுகுறித்து சரண்யாவுக்கு கிடைத்த தகவலின் பேரில் அவரும் உடனே அங்கு ஓடி வந்து கணவரின் உடலை பார்த்து கதறி அழுதார். இதுதொடர்பாக சரண்யா அளித்த புகாரின்பேரில் குலசேகரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story