கந்து வட்டி கொடுமை: பெயிண்டர் விஷம் குடித்து தற்கொலை

குமரி மாவட்டம் பூதபாண்டி பகுதி அந்தரபுரம் என்ற இடத்தை சேர்ந்தவர் மதன் (42). பெயிண்டர். நேற்று முன்தினம் வேலை சென்று விட்டு மாலையில் வீடு திரும்பினார். இரவு சாப்பிட்டு விட்டு படுத்த அவர் நேற்று காலை நீண்ட நேரம் ஆகியும் எழும்பவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவரது மனைவி சென்று பார்த்தபோது. மதன் மயங்கிய நிலையில் காணப்பட்டுள்ளார். உடனடியாக உறவினர்கள் உதவியுடன் அவரை மீட்டு பூதப்பாண்டி அரசு மருத்துவமனை கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்துவிட்டார் என தெரிவித்தனர். இது குறித்த அவர் மனைவி பூதப்பாண்டி போலீசில் புகார் செய்தார்.
போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி, வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மதன் தற்கொலை செய்வததற்கு முன்பு நான்கு பக்க கடிதம் எழுதி உள்ளார். அதில் தோப்பூரை சேர்ந்த வாலிபர் உட்பட மூன்று பேர் தன்னை மிரட்டி வந்ததாக தெரிவித்துள்ளார். கடன் வாங்கிய காசை திருப்பி கொடுத்து விட்டதாகவும், ஆனால் அவர்கள் தன்னை தொடர்ந்து கந்து வட்டி கேட்டு மிரட்டி வருவதாகவும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.இந்த கடிதத்தையும் போலீசார் கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.
