அடையாளம் தெரியாத வாகனம் மோதி பெயிண்டர் பலி

X
பெயிண்டர் பலி
தேனி மாவட்டம், வீரபாண்டி பகுதியில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி பெயிண்டர் பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தேனி மாவட்டம், உப்புக்கோட்டை எஸ் வாடிப்பட்டி பகுதியைச் சேர்ந்த காமயா என்பவர் மகன் ராஜா. இவர் நேற்று முன்தினம் பெயிண்டிங் வேலைக்கு வெளியே சென்றுள்ளார். அப்பொழுது அடையாளம் தெரியாத வாகனம் மோதி காயங்களுடன் இறந்து கிடப்பதாக வீரபாண்டி காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. இந்த விபத்து குறித்து வீரபாண்டி காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
