நண்பர்களுடன் மீன்பிடித்த போது குளத்தில் மூழ்கி பெயிண்டர் உயிரிழப்பு

நண்பர்களுடன் மீன்பிடித்த போது குளத்தில் மூழ்கி பெயிண்டர் உயிரிழப்பு

வின்சிலி

குலசேகரம் அருகே நண்பர்களுடன் சேர்ந்து மீன் பிடித்த போது குளத்தில் மூழ்கி பெயிண்டர் உயிரிழப்பு.
கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகே பொன்மனை குளச்சவிளாகம் பகுதியை சேர்ந்தவர் எலியாஸ். அவரது மகன் வின்சிலி பெயிண்டர். இன்னும் திருமணமாகவில்லை.இவர் தேன்பாறையடி பகுதியில் உள்ள ஓநாரிகுளத்தில் நண்பர்களுடன் சேர்ந்து மீன்பிடித்து கொண்டிருந்தார். குளத்துக்குள் இறங்கி மீன்பிடித்தபோது திடீரென ஆழமான பகுதிக்கு வின்சிலி சென்றார். இதனால் தண்ணீரில் தத்தளித்த வின்சிலி குளத்துக்குள் மூழ்கினார். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அவரது நண்பர்கள் உடனே வின்சிலியை மீட்டு சிகிச்சைக்காக அருகேயுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு அவரை டாக்டர் பரிசோதனை செய்தபோது வின்சிலி ஏற்கனவே இறந்துவிட்ட தாககூறினார். இதுகுறித்து தகவலறிந்த குலசேகரம் போலீசார் விரைந்து சென்று வின்சிலியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத் துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்த சம்பவம் குறித்து எலியாஸ் அளித்த புகாரின் பேரில் குலசேகரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story