மழைநீர் ஓடையில் பைக்குடன் இறந்த நிலையில் கிடந்த பெயின்டர் .

மழைநீர் ஓடையில் பைக்குடன் இறந்த நிலையில் கிடந்த பெயின்டர்
குமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே அணுக்கோடு பகுதி வெட்டுவிளை என்ற இடத்தை சேர்ந்தவர் ஸ்டாலின் ஜோண் (45 ).இவர் பெயிண்டர் வேலை செய்து வருகிறார். நேற்று இரவு வீட்டில் இருந்து வெளியே சென்றார். இரவு வெகு நேரமாகியும் அவர் வீட்டிற்கு திரும்ப செல்லவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் பல இடங்களில் தேடிப் பார்த்துள்ளனர். அப்போது வீட்டின் அருகே உள்ள மழை நீர் வடிகால் ஓடையில் தலையில் பலத்த காயத்துடன் கிடந்துள்ளார்.
பைக் அவர் மீது சரிந்து கிடந்துள்ளது. உடனே அவரை உறவினர்கள் மீட்டு குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றுள்ளன. அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஸ்டாலின் ஜோண் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இதை அடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது இது தொடர்பான புகாரின் பேரில் கொல்லங்கோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
