பெயிண்டர் கொலை வழக்கு - 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது

பெயிண்டர் கொலை வழக்கு -  2 பேர் குண்டர் சட்டத்தில் கைது
குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டோர்
நாகர்கோவிலில் பெயிண்டர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட இருவரை போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோட்டார் சபையார் குளம் பகுதியை சேர்ந்தவர் ஆகாஷ் (21). பெயிண்டர். கடந்த ஏப்ரல் 20-ஆம் தேதி 6 பேர் கும்பலால் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக கோட்டாறு போலீசார் வழக்கு பதிவு செய்து பறக்கை காந்திபுரத்தை சேர்ந்த பைசல் என்ற ஷேக் செய்யது (28), கரியமாணிக்கபுரம் தில்லை நம்பி ( 25) சுசீந்திரம் சனோஜ் என்ற பிளாக்கி (22 )மற்றும் ராகுல், ஆசிப், அஜின் ஆகியோர் மீது கொலை உட்பட எட்டு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர்.

இதில் தில்லை நம்பி, பைசல். ராகுல் சனோஜ் என்ற பிளாக்கி ஆகிய 4 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டனர். ஆசிப் என்பவர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். இந்த நிலையில் இந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ஷேக் செய்யதலி என்ற பைசல், தில்லை நம்பி ஆகிய இருவரையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் பரிந்துரையின்படி கலெக்டர் ஸ்ரீதர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அதன் பேரில் இருவர் மீதும் நேற்று கோட்டாறு இன்ஸ்பெக்டர் பாலமுருகன் இருவரையும் கைது செய்து நாகர்கோவில் மாவட்டக் கிளை சிறையில் அடைத்தனர். குமரி மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை 25 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

Tags

Next Story