கேந்திரிய வித்யாலயா பள்ளியில் மாணவர்களின் திறமையை வெளிப்படுத்தும் ஓவியப்போட்டி
பெரம்பலூர் கேந்திரிய வித்யாலயா பள்ளியில், மாணவர்களின் திறமையை வெளிப்படுத்தும், பரிக்ஷா பே சர்ச்சாவின் நோடல் லெவல் ஓவியப் போட்டி நடைபெற்றது . பெரம்பலூர் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் மாணவர்களின் திறமைகளை வெளிப்படுத்தும் "பரிக்ஷா பே சர்ச்சா- நோடல் அளவிலான ஓவியப் போட்டி" நடைபெற்றது. இந்த நிகழ்வில் கேந்திர பெரம்பலூர் வித்யாலயா பள்ளி , 5 இதர சிபிஎஸ்இ மற்றும் 10 மாநில அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த 100 திறமையான மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
பிரதமரின் 'தேர்வு வாரியர்ஸ்' புத்தகத்தில் உள்ள 25 குறிப்புகள், மற்றும் ‘சந்திராயன்’, ‘இந்தியாவின் விளையாட்டு வெற்றி’ மற்றும் ‘விகாசித் பாரத் ‘ ஆகிய கருப்பொருள்களின் அடிப்படையில் மாணவர்களின் எண்ணங்களையும் உணர்வுகளையும் கலை மூலம் வெளிப்படுத்தும் வகையில், புது டில்லியின் கல்வி அமைச்சகத்தால் ஓவியப் போட்டி, நடத்தப்பட்டது.
பெரம்பலூர் கேந்திரிய வித்யாலயா வளாகத்தில் நடைபெற்ற இப்போட்டியில், நடுவர்களாக டாக்டர். குமணன், இயற்பியல் துறை உதவி பேராசிரியர், டாக்டர் ஸ்ரீதர், பெரம்பலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, தமிழ் துறை உதவி பேராசிரியர், செல்வபாண்டியன், ஆகியோர் மாணவர்களின் படைப்புகளை மதிப்பிட்டனர்.
போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பிரதமரால் எழுதப்பட்ட பரீட்சை வாரியர் புத்தகம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார் பள்ளி முதல்வர் மேகநாதன் மாணவர்களின் முன்மாதிரியான முயற்சிகளைப் பாராட்டி அவர்களின் படைப்பாற்றலை ஊக்குவித்து பராட்டினார். இந்நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்கள் ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.