ஓவியப் போட்டி: கிருஷ்ணகிரி மாணவர் முதலிடம்

ஓவியப் போட்டி: கிருஷ்ணகிரி மாணவர் முதலிடம்

கிருஷ்ணகிரி, பாவக்கல் அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்பதாம் வகுப்பு மாணவர் தரனிஷ், மாவட்ட அளவிலான ஓவியப் போட்டியில் முதலிடம் பெற்றுள்ளார்.  

கிருஷ்ணகிரி, பாவக்கல் அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்பதாம் வகுப்பு மாணவர் தரனிஷ், மாவட்ட அளவிலான ஓவியப் போட்டியில் முதலிடம் பெற்றுள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் பாவக்கல் அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்பதாம் மாணவர் தரனிஷ் மாவட்ட அளவில் நடைபெற்ற ஓவிய போட்டியில் முதலிடம் பெற்று சாதனை. எதிர்கால உலகம் என்ற தலைப்பில் மாவட்ட அளவில் ஓவிய போட்டி நடைபெற்றது.

இந்த போட்டியில் சுமார் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்குபெற்றனர். இதில் பாவக்கல் அரசு மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த தரனிஷ் என்ற மாணவர் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார். வெற்றிபெற்ற மாணவர் தரனிஷை பாராட்டும் வகையில் இன்று பள்ளியில் பாராட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டது. பள்ளித்தலைமையாசிரியர் பாக்கியநாதன் மாணவனை பாராட்டி சான்றிதழ், கேடயம் மற்றும் மூன்றாயிரம் பரிசுத்தொகையும் வழங்கி பாராட்டினார். இந்நிகழ்ச்சியில் பள்ளி உதவி தலைமையாசிரியர் அவுத்தர் பாஷா, ஆசிரியர் தவமணி, ஆசிரியை தமிழ்செல்வி, சாயிராபானு, வச்சலா, ஷண்முகம், வட்டாரவள மையம் வசந்தி, ராஜ்கமல், பிரபு, மாணவருக்கு பயிற்சி அளித்த பகுதி நேர ஓவிய ஆசிரியர் குணசேகரன் ஆகியோர் வெற்றிபெற்ற மாணவனை பாராட்டி வாழ்த்தினர். உடன் மாணவரின் பெற்றோர் இருந்தனர்.

Tags

Next Story