தேர்வு பயம் போக்க ஓவிய போட்டி
தேசபக்தியின் உருவமாக விளங்கிய நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் வீரம் மற்றும் தைரியத்தை கெளரவிக்கும் விதமாக அவரது 127 வது பிறந்த நாளான ஜனவரி 23 ஆம் தேதி மத்திய அரசு வீரதீர தினமாக கொண்டாடி வருகிறது.மேலும் தொடர்ந்து 9 நாட்கள் வீரதீர உத்சவத்தை பிரதமர் மோடி டெல்லி செங்கோட்டையில் இன்று தொடங்கி வைக்கிறார்.
இந்நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக விருதுநகர் அருகே வரலொட்டி ஊராட்சியில் உள்ள மத்திய அரசு பள்ளியான பி.எம்.ஸ்ரீ கேந்திரிய வித்யாலயாவில் மாணவர்களின் தேர்வு பயம்போக்கும் "தேர்வு வீரர்கள்" என்ற தலைப்பில் மாவட்ட அளவிலான ஓவியப்போட்டி பள்ளித்தலைவரும் மாவட்ட ஆட்சியருமான ஜெயசீலன் வழிகாட்டுதலில் பள்ளி முதல்வர் (பொறுப்பு) ராஜேந்திரன் முன்னிலையில் நடைபெற்றது."தேர்வு வீரர்கள்" என்ற தலைப்பில் நடைபெற்ற இப்போட்டியில் அரசுப்பள்ளி மற்றும் சி.பி.எஸ். சி பள்ளிகளை சேர்ந்த 100 மாணவர்கள் கலந்து கொண்டு தங்கள் திறமையை வெளிப்படுத்தினர். பங்கேற்ற மாணவர்கள் அனைவருக்கும் சான்றிதழ் மற்றும் தேர்வு வீரர்கள் பற்றிய புத்தகம் வழங்கி கெளரவிக்கப்பட்டது..சிறப்பாக தேர்ந்தெடுக்கப்பட்ட 5 ஓவியத்திற்கு வெகுமதியும் வழங்கப்பட்டது.