பாலக்கோடு : தரமற்ற உறிஞ்சு குழிகள்,கண்டுகொள்ளாத நிர்வாகம்

பாலக்கோடு : தரமற்ற உறிஞ்சு குழிகள்,கண்டுகொள்ளாத நிர்வாகம்

உறிஞ்சு குழி 

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு ஒன்றியத்துக்கு உட்பட்ட 32 ஊராட்சிகளில் தேசிய வேலை உறுதி திட்டம், தூய்மை பாரத இயக்கம் மூலம் பொதுமக்கள் பயன்படுத்தும் தண்ணீர் குழாய் அமைத்துள்ள பகுதிகளிலும் சாக்கடை கால்வாய் முடிவுறும் பகுதிகளிலும் சமுதாய உறிஞ்சி குழாய் அமைக்க தலா 14500 ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் மூலம் சாக்கடை நீர், கழிவுநீர், மழைநீர் உள்ளிட்டவைகள் நிலத்திற்கு அடியில் சென்று அப்பகுகுதியின் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த உருவாக்கப்பட்டது. இந்த உறிஞ்சி குழாய் 12 அடி ஆழம் 3அடி அகலம் கொண்டதாகவும் 3சிமெண்ட் ரிங்குடன் அமைக்கப்பட வேண்டும். ஆனால் ஒப்பந்ததாரர் கடந்த காலங்களில் ஏற்கனவே அமைக்கப்பட்ட உறிஞ்சி குழிகள் மீது புதிதாக அமைத்தவாறு சிமெண்ட் பூசி பெயிண்ட் அடித்து புதியதாக கட்டியது போல் போலீயாக பில் போட்டு பணத்தை கொள்ளையடித்து வருவதாகவும், மேலும் புதியதாக அமைக்கப்படும் நீர் உறிஞ்சி குழிகளும் அரசு விதிமுறைகளுக்கு மாறக குறைந்த ஆழத்துடன் தரமற்ற முறையில் அமைத்து வருவதாகவும், இதனால் கழிவுநீர் மற்றும் மழைநீர் முழுமையாக உறிஞ்சப்படுவதில்லை என்றும் துர்நாற்றம் வீசுவதாகவும், பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

மேலும் தரமற்ற முறையில் அமைக்கப்படும் உறிஞ்சிக் குழிகளுக்கு ஒப்பந்ததாரர் மற்றும் அதிகாரிகள் கூட்டு சேர்ந்து அரசு பணத்தை கொள்ளையடித்து வருகின்றனர். உறிஞ்சி குழிகளை ஆய்வு என்ற பெயரில் பெயரில் ஆய்வு மேற்கொள்ளாமல் பல்வேறு கட்டங்களில் அதிக அளவில் முறைகேடு நடைபெறுவதாகவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர் . இதன் மூலம் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுவது மட்டுமின்றி தரமற்ற முறையில் அமைக்கப்படும் உறிஞ்சி குழிகளால் பொதுமக்கள் அதிர்ச்சியை அடைந்து வருகின்றனர். எனவே தமிழக அரசு உயர்மட்ட குழு அமைத்து 32 ஊராட்சி பகுதிகளில் உள்ள உறிஞ்சி குழிகளை முழுமையாக ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story