பெருமாள் கோவிலில் பாலாலயம்
தியாகராஜபுரம் பெருமாள் கோவிலில் பாலாலய விழா நடந்தது.
தியாகராஜபுரம் பெருமாள் கோவிலில் பாலாலய விழா நடந்தது.
சங்கராபுரம் அடுத்த தியாகராஜபுரம் கிராமத்தில் கடந்த 35 ஆண்டுக்கு முன், லட்சுமிநாராயண பெருமாள் கோவில் புதிதாக கட்டப்பட்டது. இக்கோவிலின் மேற்கூரை காரைகள் பெயர்ந்து சிதிலமடைந்துள்ளது. கோவிலை புதுப்பித்து கோவில் கும்பாபிேஷகம் செய்ய தீர்மானிக்கப்பட்டது. இதையொட்டி கோவிலில் இருந்த சாமி விக்ரகங்கள் அகற்றப்பட்டு பாலாலய நிகழ்ச்சி நடந்தது.
விஸ்வநாத கனபாடிகள் தலைமையில் ஓய்வுபெற்ற மாவட்ட வருவாய் அலுவலர் பிச்சன், ராஜப்பா, ஸ்ரீராமன் முன்னிலையில் சிறப்பு யாகவேள்வி பூஜை நடந்தது. நிகழ்ச்சியில் ஊர் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.
Next Story