பாலமேடு ஜல்லிகட்டு வாடிவாசல் வர்ணம் பூசும் பணிகள் தொடக்கம்

பாலமேடு ஜல்லிகட்டு வாடிவாசல் வர்ணம் பூசும் பணிகள் தொடக்கம்

வர்ணம் பூசும் பணிகள் தொடக்கம்

மதுரை மாவட்டம் பாலமேடு ஜல்லிகட்டு வாடிவாசல் வர்ணம் பூசும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

மதுரை பாலமேட்டில் ஜனவரி 16ல் உலகப்புகழ்பெற்ற ஜல்லிகட்டு போட்டி அங்குள்ள மஞ்சமலையாறு மைதானத்தில் நடைபெற உள்ளதை முன்னிட்டு வாடிவாசலை வண்ணம் தீட்டி புதுப்பிக்கும் பணிகள் தொடங்கியது.

இதனையடுத்து தற்போது மைதானத்தை தூய்மைபடுத்தும் பணி, பார்வையாளர்கள் அமரும் கேலரி, காளைகள் வந்துசேரும் இடம், காளைகள் சேகரிக்கும் இடம் உள்ளிட்ட பகுதிகளை தூய்மைபடுத்தும் பணிகள் தொடங்கியுள்ளது.

இந்தாண்டு 2024 பாலமேடு ஜல்லிகட்டு அரசின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு விதிமுறைகள் படி ஜனவரி 16ல் நடைபெற உள்ளது.

இதில் கலந்து கொண்டு அதிக காளைகளை அடக்கும் வீரருக்கு முதல் பரிசாக சொகுசுகார் இரண்டவது பரிசாக பைக் சிறந்த காளைக்கு - முதல் பரிசு - பைக் இரண்டாவது பிரிசு - கன்றுடன் கூடிய நாட்டு பசு பரிசாக வழங்கப்பட உள்ளது.

இது போக டிவி, பிரிட்ஜ், வாசிங் மெசின், தங்ககாசு, சைக்கிள் உள்ளிட்ட எண்ணற்ற பரிசு பொருட்கள் வழங்கப்பட உள்ளதாக பாலமேடு ஜல்லிகட்டு பொதுமகாலிங்கசுவாமி மடத்து கமிட்டி செயலாளர் பிரபு தெரிவித்துள்ளார்.

Tags

Next Story