பள்ளி பாளையத்தில் சாரை சாரையாக அணிவகுக்கும் பழனி பக்தர்கள்
நாமக்கல் ஈரோட்டை இணைக்கும் முக்கிய பகுதியாக பள்ளிபாளையம் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி மலை முருகன் கோவிலுக்கு, பாதயாத்திரையாக செல்லும் பக்தர்கள் பெரும்பாலும் பள்ளிபாளையம் வழியே அரச்சலூர், காங்கேயம், தாராபுரம் வழியாக பழனிக்கு செல்வது வழக்கம். இந்த ஆண்டும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பழனி மலைக்கு பாதயாத்திரை மேற்கொள்வதற்காக பக்தர்கள் சாரை சாரையாக கடந்த இரண்டு தினங்களாக, பள்ளிபாளையம் வழியே செல்கின்றனர்.
அவர்களுக்கு தேவையான குடிநீர், உணவு, பிஸ்கட் உள்ளிட்டவை சமூக ஆர்வலர்களும், தன்னார்வ அமைப்புகளாலும் வழங்கப்பட்டு வருகிறது இதன் காரணமாக பள்ளிபாளையம் பிரதான சாலையில் எங்கு பார்த்தாலும் பழனி பாதயாத்திரை பக்தர்களின் முகங்களாகவே காண முடிகிறது. பாதயாத்திரையில் ஆண்களும், பெண்களும், இளைஞர்களும் என பலரும் ஆர்வமுடன் பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர்...