பழனி முருகன் கோவில் நிர்வாகம் விளக்கம் அளிக்க கோரிக்கை

பழனி முருகன் கோவில் நிர்வாகம் விளக்கம் அளிக்க கோரிக்கை

பழநி பஞ்சாமிருதம்

பழனி முருகன் கோவிலில் 80 ஆயிரம் டப்பா பஞ்சாமிர்தங்கள் அழிக்கப்பட்டதாக தேவஸ்தான நிர்வாகம் விளக்கம் அளிக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலில் கடந்த சில நாட்களாக பிரசாதங்கள் மற்றும் பஞ்சாமிர்தம் என காலாவதியான பொருட்களை விற்பனை செய்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த நிலையில் திண்டுக்கல் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரி கலைவாணி தலைமையிலான பாதுகாப்பு குழுவினர் அனைத்து கடைகள் மற்றும் தேவஸ்தான பிரசாதங்கள் தயாரிக்கும் இடங்களில் ஆய்வு செய்தனர்.

பின்னர் ஆய்வு செய்த பிரசாதங்களை ஆய்வகத்திற்கும் அனுப்பி வைத்தனர். பக்தர்கள் வருகை அதிகளவில் இருந்தும் பஞ்சாமிர்த விற்பனை அதிகளவில் ஆகாததால் பஞ்சாமிர்தம் தேக்கம் அடைந்து விட்டதாகவும் கூறப்பட்டது.மேலும், விற்பனை செய்யப்பட்ட சில பிரசாதங்களில் தவறு ஏற்பட்டுள்ளதாகவும்,

அதனால் அதனை தேவஸ்தானத்திற்கு சொந்தமான பழநி அருகே உள்ள கள்ளிமந்தயம் கோசாலையில் குழி தோண்டி 80,000 மேற்பட்ட பஞ்சாமிர்த டப்பாக்கள் அழிக்கப்பட்டதாகவும் தகவல் பரவி வருகிறது.

Tags

Next Story