சுவாமி தரிசனத்தில் பாளையங்கோட்டை முஸ்லிம் எம்எல்ஏ !

சுவாமி தரிசனத்தில் பாளையங்கோட்டை முஸ்லிம் எம்எல்ஏ !

எம்எல்ஏ அப்துல் வஹாப் 

திமுக கூட்டணியில் ஆதரவாக பாளை எம்எல்ஏ அப்துல் வஹாப் அம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்து பக்தர்களிடம் பிரச்சாரம் மேற்கொண்டு கை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.
திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸ் போட்டியிடுகின்றார். அவருக்கு ஆதரவாக நேற்று (ஏப்.3)இரவு பாளை எம்எல்ஏ அப்துல் வஹாப் ஏழாவது வார்டு பகுதியில் கை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அப்பொழுது அங்குள்ள அம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்து பக்தர்களிடம் பிரச்சாரம் மேற்கொண்டார். இதில் திமுக,காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Tags

Next Story