பழையபாளையம் நஞ்சுண்டேஸ்வரர் நூதன ஆலய மஹா கும்பாபிஷேகம்

நாமக்கல் அடுத்து பழையபாளையம் பார்வதி அம்பிகை உடனுறை நஞ்சுண்டேஸ்வரர் நூதன ஆலய அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நடந்தது.

நாமக்கல் அடுத்து உள்ள அலங்காநத்தம் பிரிவு ரோடு சேந்தமங்கலம் பிரதான சாலையில் அமைந்துள்ள "பழையபாளையம் கிராமம்" சின்ன ஏரி மற்றும் பெரிய ஏரி நீர் பெருகி வழிந்து ஓடும் இயற்கை எழில் மிகுந்த இடத்தில் வினை தீர்க்கும் அருள்மிகு விநாயக பெருமாள் ஆலயமும், கலியுக வரதன் கந்தக் கடவுள் முருகப் பெருமான் ஆலயமும். செல்வ வளம் கொழிக்கும் மஹாலக்ஷ்மி ஆலயமும் துன்பம் துயர் நீக்கும் காலபைரவர் ஆலயமும்.

சூரியன். சந்திரன் நவக்கிரஹம் மற்றும் தனி சனீஸ்வரன். கோஷ்ட பரிவாரமாகிய நர்த்தன கணபதி, தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை உடன் சண்டிகேஸ்வரர் ஆலயமும், நந்தி, கொடிமரம் உடனாகிய அருள்மிகு ஸ்ரீ பார்வதி அம்பிகை சமேத நஞ்சுண்டேஸ்வரர் ஆலயமும், முன் மண்டபம், திருமதில் இவ்வாறு அனைத்து திருப்பணிகளும் புதிய முறையில் செய்து இருந்தனர்.

இதனை தொடர்ந்து ஆலயத்தின் மகாகும்பாபிஷேகத்தை ஒட்டி க்ஷ கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம், கோ பூஜை, தன பூஜை, கரிவலம், புதிய பிம்பங்களுக்கு கண் திறத்தல், யாகசாலை நிர்மானம், வாஸ்து சாந்தி, அங்குரார்ப்பணம், கும்பலங்காரம், யாகசாலை பிரவேசம், பிம்ப பிரதிஷ்டை, முதற் கால யாக சாலை பூஜைகள், தீபாரதனை, பிரசாதம் வழங்குதல் உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து, இரண்டாம் கால யாகசாலை பூஜைகள், அஷ்டபந்தனம், தீபாராதனை, பிரசாதம் வழங்குதல், மூன்றாம் கால யாக சாலை பூஜைகள், தத்வார்ச்சனை, நாடி சந்தனம், பூர்ணாஹுதி, திரவ்யாஹூதி, பிரசாதம் வழங்குதல் உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன. கும்பாபிஷேக தினமான இன்று (மார்ச் 27)காலை நான்காம் கால யாகசாலை பூஜை, மகா பூர்ணாஹூதி, யாத்ராதானம், குடப்புறப்பாடு உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

இதனைத் தொடர்ந்து பக்தர்கள் புடை சூழ மேள தாளங்கள் சிவ நாமம் முழங்க புனித நீர் அனைத்து கோபுரங்களுக்கும் கொண்டு செல்லப்பட்டு அனைத்து விமான கோபுரங்களுக்கும் கும்பாபிஹேகம் நடைபெற்றது. இன்று மார்ச் 27.03.2024 புதன்கிழமை காலை 10 மணியளவில் "மஹா கும்பாபிஷேகம்" நடைபெற்றது.

கும்பாபிஷேகத்தை சிவஸ்ரீ G.செல்வகபில தலைமையில் சிவாச்சாரியார்கள் கலசத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர். அப்போது கோயிலைச் சுற்றிலும் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் நின்று தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு தீர்த்த பிரசாதம் வழங்கப்பட்டதோடு, மகாபிஷேகம் நடைபெற்று, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகளை S. பழையபாளையம் அருள்மிகு நஞ்சுண்டேஸ்வரர் திருக்கோயில் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர்/ நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் வெகு சிறப்பாக செய்து இருந்தனர்.

Tags

Next Story