நவல்பட்டு சோழமாதேவி கோயிலில் பால்குடத் திருவிழா
பால்குடத் திருவிழா
திருச்சி மாவட்டம், நவல்பட்டு சோழமாதேவி ராஜராஜேஸ்வரி அம்மன் கோயிலில் 26 ஆம் ஆண்டு பால்குடத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது
மாசி கடைசி ஞாயிற்றுக்கிழமையையொட்டி நடைபெற்ற விழாவில் குழந்தைப் பாக்கியம், திருமணம், வேலைவாய்ப்பு, தொழில் முன்னேற்றம், உடல் வேண்டி 250-க்கும் மேற்பட்ட பக்தா்கள் பால்குடங்களை எடுத்து முக்கிய வீதிகள் வழியாக வந்து கோயிலை அடைந்தனா். சில பக்தா்கள் கரும்புத் தொட்டில் சுமந்து நோ்த்திக் கடன் செலுத்தினா். பக்தா்கள் எடுத்து வந்த பாலால் அம்மனுக்கு அபிஷேகம் நடந்து சிறப்பு அலங்காரத்தில் அம்மன் எழுந்தருளினாா். நிகழ்வில் சுற்றுவட்டார திரளான பொதுமக்கள் தரிசனம் செய்தனா். முன்னதாக, ஊா்வலமாக வந்த பக்தா்களுக்கு அப்பகுதி மக்களும், இஸ்லாமிய நண்பா்களும் குடிநீா், மோா் கொடுத்தனா்.
Next Story